தளபதி விஜய்யின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் தளபதி 66 படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.
2வது போஸ்டர்:
இளைய தளபதி விஜய் தனது 48-வது பிறந்தநாளை இன்று (22-06-2022) கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒற்றை தலைமையே என குறிப்பிட்டு ஒட்டிய போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நேற்று மாலை வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டாகி வந்தது. படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
படத்திற்கு “வாரிசு (The Boss Returns)” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் 2வது போஸ்டர் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பலரால் பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாளில் வாரிசு படத்தின் 2 போஸ்டர்கள் வெளியாகி உள்ளதால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
Let us all come together to celebrate #Varisu for Pongal 2023.#VarisuSecondLook#Varisu#HBDDearThalapathyVijay
Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/gvVqh1LJ7j
— Sri Venkateswara Creations (@SVC_official) June 22, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்