‘ஒன்றிணைவோம், உணவளிப்போம்’ – ஏழைகளுக்கு உணவளிக்க முக ஸ்டாலின் புது முயற்சி..!

0
MK Stalin
MK Stalin

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். வசதி படைத்தோருக்கு இது வெறும் ஊரடங்கு தான் என்றாலும் ஏழை, எளியோருக்கு வருமானம் இல்லாமல் பசிப் போராட்டமாக உள்ளது. அவ்வாறு கஷ்டப்படுபவர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் தலைவர்களும் உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், ‘ஏழை எளியோருக்கு உணவு’ என்ற புது திட்டத்தை தொடங்கி உள்ளார்.

20 லட்சம் உணவு:

இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முக ஸ்டாலின் அவர்கள், தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் எனும் மகாகவியின் சொல்லுக்கேற்ப தமிழகம் முழுவதும் 25 நகரங்களில் பசியிலிருப்போர்க்கு 20 லட்சம் உணவு அளிக்கும் இந்த சிறு முயற்சியை தொடங்குவதில் மனநிறைவு அடைவதாக தெரிவித்து உள்ளார். மேலும் பேசிய அவர்,

கொரோனா ஊரடங்கு பலரின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், ‘’ஒன்றிணைவோம் வா’’ என்ற திட்டத்தைத் தொடங்கினேன்; ஒருவாரத்திலேயே ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. உதவி கேட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களை வழங்கிக் கொண்டு வருகிறோம்.

சமைப்பதற்கு இடமில்லை:

இதுவரை வந்த அழைப்புகளில் ஒருவர் “எங்களுக்கு உணவுப் பொருட்கள் கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் சமைப்பதற்கு எங்களுக்கு இடம் கிடையாது” என்று கூறியது தனது இதயத்தை நொறுக்கி விட்டதாக முக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதனால் பசியோடு உள்ள குழந்தைக்கும், குடும்பத்துக்கும் உணவைத் தரமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.

‘’ஏழைகளுக்கு உணவளிப்போம்’’ என்ற இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு உணவளிப்போம் என்றும் இதற்காக 25 முக்கிய நகரங்களில் சமையற் கூடங்களை உருவாக்கி, உணவுகள் வழங்கப் போகிறோம். பேரிடர் காலத்தில் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்போம். பேரிடரில் இருந்து மீளப் பசியில்லா சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here