ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில், நாயகியாக நடித்து வரும் ஷபானா தனது சக நடிகருடன் போட்ட ரீல்ஸ் பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வைரலாகும் வீடியோ:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று செம்பருத்தி. இந்த தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷபானா. தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இவர் வலம் வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையில், ஏதோ பிரச்சனை ஏற்பட்டு, விவாகரத்து பெற உள்ளதாக அண்மையில் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், நடிகை ஷபானா அதை அறவே மறுத்தார். நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது, ஷபானாவும் அவரது சக நடிகரான கதிரும் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. அந்த வீடியோவின் கேப்ஷனில் நாங்க சொன்னதை நீங்க நம்பிட்டீங்க தானே? என காமெடியாக பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்