நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாந்துடன் இணைந்து பார்த்து உள்ளார். இதற்கு தேவிஸ்ரீ பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார்.
புஷ்பா திரைப்படம்:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசைமைத்திருந்தார். ஒரு சில நாட்களிலேயே இப்படம் கோடிகோடியாக வசூல் சாதனை செய்து விட்டது.
இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாந்துடன் இணைந்து புஷ்பா திரைப்படத்தை பார்த்து உள்ளார்.மேலும் படத்தை பார்த்த கமல், நடித்த அனைவரும் நன்றாக நடித்து இருப்பதாக வாழ்த்து கூறியுள்ளார். இதை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்புள்ள உலகநாயகன் கமல்ஹாசன் ஐயா அவர்களுக்கு, நேரத்தை ஒதுக்கி எங்கள் புஷ்பா படத்தை பார்த்ததற்கு மிக்க நன்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Dearest ULAGANAYAGAN @ikamalhaasan sir
Thanku so much 4 taking out time & watching our #PushpaTheRiseOnPrime ??U r d sweetest Sir❤️
ThankU 4 all d lovely words about d work of all of Us??@alluarjun @iamRashmika @aryasukku @MythriOfficial @boselyricist @adityamusic @TSeries pic.twitter.com/BerDdtBg2T
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) January 15, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்