பெண் பிள்ளைகளை இப்படி தான் இப்படித்தாங்க வளர்க்கனும் – பிரபல இயக்குனர் பேச்சால் கொந்தளித்த ரசிகர்கள்!!

0

பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா தற்போது பெண்களின் வளர்ப்பு குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இவர் கூறியது தற்போது மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இயக்குனர் முத்தையா:

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி என பல கிராமப்புற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்தையா. இவர் தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் குறித்தான ஒரு பேட்டியில் முத்தையா பெண்களின் வளர்ப்பு குறித்து சில வரிகள் பேசியுள்ளார்.

அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நான் எனது மகளை ஒரு போட்டோ எடுக்க அனுமதிக்க மாட்டேன். அந்த புகைப்படத்தினை வைத்து தவறாக சித்தரித்து விடுகிறார்கள். பெண் பிள்ளையை பெண்ணாக தான் வளர்க்க வேண்டும். அதற்கும் சில வரைமுறைகள் உண்டு அப்படி தான் பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். இப்படியெல்லாம் கூறியதால் நீங்கள் என்னை பழமைவாதி என்று கூறினால், ஆம் நான் பழமைவாதி தான் என்று கூறியுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here