சினிமா திரையில் ஆற்றும் பங்களிப்பிற்காக நடிகர் சிம்பு டாக்டர் பட்டம் பெற்றார். இவரை தொடர்ந்து அபிராமியும் பரதநாட்டியத்துக்காக தற்போது டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
டாக்டர் பட்டம் பெற்ற அபிராமி:
தமிழ் திரையுலகில் துணை கதாநாயகியாக அபிராமி வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே மக்களின் ஆதரவு இவருக்கு கிடைத்தது. காற்று வெளியிடை, விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தான் சினிமா துறைக்காக நடிகர் சிம்புவை கௌரவித்து வேல்ஸ் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது அபிராமிக்கும் St.மதர் தெரசா பல்கலைக்கழகம் பரதநாட்டியத்திற்காக டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இவர் டாக்டர் பட்டம் வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்