கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல திரைப்பட தயாரிப்பாளர் – மருத்துவமனையில் அனுமதி!!

0

உலகம் முழுவதிலும் மீண்டும் கொரோனா அதிகமாக பரவ தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் ரியா கபூர் தனது இன்ஸ்ட்ராகிராம் வலைப்பக்கத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட செய்தியை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரியா கபூர்:

பாலிவுட்டில் பல பிரபல திரைப்படங்களை தயாரித்தவர் ரியா கபூர். இவர் வீரா டி வெட்டிங், ஆயிஷா, ஷார்ட் கட் ஆகிய படங்களில் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தியை தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் நாங்கள் மிக கவனமாக இருந்தும் நானும் எனது கணவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கிறது. மக்கள் சாதாரணமாக வெளியே சென்றாலே இந்த வைரஸ் தொற்றி கொள்கிறது. தற்போது நானும் எனது கணவரும் சரியான வழிகாட்டுதலின் பேரில் சிகிச்சை பெற்று வருகிறோம். விரைவில் பூரண நலம் பெறுவோம் என கூறியுள்ளார். ரசிகர்கள் பலர் இவர் மீண்டு வர தைரியம் கூறி வருகின்றனர்.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here