டி.ஆர்.பி மதிப்பெண் அடிப்படையில் எப்போதும் முன்னிலையிலேயே இருந்து வரும் விஜய் தொலைக்காட்சி தற்போது பின்னுக்கு சென்றுள்ளது. விஜய் டீவியை பின்னுக்கு தள்ளி தற்போது சன் டிவி முன்னிலையில் உள்ளது.
முதலிடத்தை பிடித்த சன் டிவி
சீரியல்களுக்காகவே பெயர் போன தொலைக்காட்சி தான் விஜய் டிவி மற்றும் சன் டிவி. இந்த இரண்டு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் அனைத்தும் மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் அந்த சீரியலுக்கான டி.ஆர்.பி மதிப்பு வெளியிடப்படும். அதே போல் இந்த வாரமும் இந்த வாரத்திற்க்கான டி.ஆர்.பி மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எப்போதும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ”பாரதி கண்ணம்மா” சீரியல் தான் முதலிடத்தை பிடித்து வந்தது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ”கயல்” சீரியல் முன்னிலையில் உள்ளது. விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் அனைத்தும் பின்னுக்கு சென்றுள்ளது. டி.ஆர்.பி மதிப்பெண் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் முதல் 10 சீரியல்களின் விவரங்கள் வெளிடப்பட்டுள்ளது.
கயல் முதல் இடத்திலும், சுந்தரி, வானத்தைப் போல, ரோஜா ஆகிய சீரியல்கள் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திலும், பாரதி கண்ணம்மா ஐந்தாம் இடத்திலும், பாக்கியலட்சுமி ஆறாம் இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஏழாம் இடத்திலும், கண்ணான கண்ணே, அபியும் நானும், அன்பே வா ஆகிய சீரியல்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளது. முதல் நான்கு இடத்தை சன் டிவி சீரியல்களே பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் டிவி பின்னுக்கு தள்ளப்பட்டு சன் டிவி முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்