நடிகை பூர்ணா, ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடனம் ஆடிய ஒரு இளைஞருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து அவரை கடித்த வீடியோ இணையத்தில் தற்போது படு வேகமாக ட்ரெண்டாகி பல எதிர்ப்புகளை ரசிகர்களிடம் இருந்து கிளப்பி வருகிறது
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை பூர்ணா, தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர். அதன் பின்னர் கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி ஆகிய படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழ், மலையாளம் தாண்டி தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழில் மட்டுமில்லாமல் வேறு மொழிகளிலும் ரியாலிட்டி ஷோக்கள் மிக பிரபலமான ஒன்று. அந்த வகையில் தெலுங்கில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோ ‘தீ ஜோடி’. இதில் நடுவராக உள்ள பூர்ணா, தற்போது சர்ச்சைக்குரிய ஒரு செயலை செய்துள்ளார். அதாவது அந்த ஷோவில் நன்றாக நடனம் ஆடிய ஒரு இளைஞருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து திடீரென அவரை கடித்துள்ளார்.
Oru judge panra velyaa ithu
Actress #Poorna Kissed And Bites Contesant Cheek pic.twitter.com/l3p3Nxb1XD— chettyrajubhai (@chettyrajubhai) September 17, 2021
இவ்வாறு இவர் நடந்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ஒரு நடிகை ஒரு நிகழ்ச்சியில் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்