இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடிகர் சிம்பு தரவுள்ள இசை விருந்து!!

0
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடிகர் சிம்பு தரவுள்ள இசை விருந்து!!
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடிகர் சிம்பு தரவுள்ள இசை விருந்து!!

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணிக்காக நடிகர் சிம்பு ஒரு ஆல்பம் பாடலை வெளியிட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆல்பம் பாடல் வெளியீடு:

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு கிரிக்கெட் அணி வீரர்களும் தங்களுடைய சுய தனிமைப்படுத்துதலை முடித்து கொண்டு நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் களமிறங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடிகர் சிம்பு தரவுள்ள இசை விருந்து!!
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடிகர் சிம்பு தரவுள்ள இசை விருந்து!!

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு சிறந்த சர்ப்ரைஸ் இருப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். சென்னை அணியின் ஜெர்சியுடன் ட்விட்டரில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் சிம்பு. அந்த பதிவில் சிம்பு “சர்ப்ரைஸுக்கு தயாராகுங்கள், சர்ப்ரைஸ் என்னனு கண்டுபிடிங்க” என குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து, அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆல்பம் பாடல் ஒன்றை பாடி உள்ளதாகவும், அப்பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

மாநாடு படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு இதன் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான இவரின் பாடல் அறிவிப்பு மிகுந்த கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அவருக்கு வெந்து தணிந்தது காடு மற்றும் மஹா உள்ளிட்ட படங்கள் கைவசம் இருப்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here