தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா தற்போது ஜோதிகாவின் படவாய்ப்பை தட்டி பறித்துள்ளார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் இரண்டு படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் அனுஷ்கா. யோகா கலையில் சிறந்து விளங்கும் இவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரை திரைக்கு அறிமுகப்படுத்தியதே நாகார்ஜூனா தானாம். நாகசைதன்யா அனுஷ்காவிடம் யோகா கிளாஸுக்கு செல்ல அவரின் அழகை பார்த்து தன் அப்பாவிடம் வந்து சொல்ல உடனே வாய்ப்பு கொடுத்து விட்டாராம்.
இவருக்கு அதிகளவு புகழை பெற்று தந்ததே அருந்ததி திரைப்படம். அந்த படத்தில் மொத்த வீரத்தின் அடையாளமாக நடித்திருப்பார். அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். மேலும் பாகுபலி திரைப்படம் அவரின் ஒட்டுமொத்த கேரியரையும் தூக்கி நிறுத்தியது. இவருக்கு 30 வயது ஆன நிலையில் எப்பொழுது திருமணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனாலும் திருமணத்தை தள்ளி போட்டு தான் வருகிறார். இந்நிலையில் அருந்ததி மற்றும் பாகுபலி போல அவருக்கு இன்னொரு வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதாவது சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகவுள்ள நிலையில் அதில் ஜோதிகா கதாபாத்திரத்திற்கு பதிலாக அனுஷ்கா நடிக்கவுள்ளாராம். இப்படி ஜோதிகாவின் வாழ்க்கையை தட்டி பறித்துள்ளார் அனுஷ்கா. மேலும் அனுஷ்கா இந்த படத்தில் ஜோதிகாவையே மிஞ்சும் நடிப்பை கொடுப்பார் என்றும் ரசிகர்கள் வட்டாரம் கூறி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்