ஒரே படத்திலேயே சாதனை படைத்த ரம்யா பாண்டியன்… ட்ரைலர்லேயே இப்படி மிரட்டிட்டீங்களே!!!

0

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் போட்டோ ஷூட்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் ரம்யா பாண்டியன். இவர் தற்போது ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இந்த ட்ரைலர் வீடியோவை இது வரை 5 மில்லியனுக்கு மேலானோரால் பார்க்கப்பட்டு ஒரு சாதனை படைத்து உள்ளது.

ஒரே படத்திலேயே சாதனை படைத்த ரம்யா பாண்டியன்... ட்ரைலர்லேயே இப்படி மிரட்டிட்டீங்களே!!!
ஒரே படத்திலேயே சாதனை படைத்த ரம்யா பாண்டியன்… ட்ரைலர்லேயே இப்படி மிரட்டிட்டீங்களே!!!

ஒரு சில தமிழ் படங்களில் நடித்து சினிமாவுக்குள் வந்தவர் ரம்யா பாண்டியன், எனினும் அவர்க்கும் அந்த படங்கள் அப்பொழுது அவர் நினைத்த அளவுக்கு புகழை பெற்று தரவில்லை. இதனால் தனக்கென ரசிகர்களை உருவாக்க போட்டோ ஷூட் பக்கம் கவனத்தைத் திருப்பி தனது இடுப்பழகை காட்டியே எக்கசக்க ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.

ஒரே படத்திலேயே சாதனை படைத்த ரம்யா பாண்டியன்... ட்ரைலர்லேயே இப்படி மிரட்டிட்டீங்களே!!!
ஒரே படத்திலேயே சாதனை படைத்த ரம்யா பாண்டியன்… ட்ரைலர்லேயே இப்படி மிரட்டிட்டீங்களே!!!

இதன் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.அந்த நிகழ்ச்சியிலும் அவருக்கு நல்ல ஆதரவு இருந்ததை அடுத்து அவருக்கு பிக் பாஸில் நுழைய சான்ஸ் வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனார். அதன் பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம்.

ஒரே படத்திலேயே சாதனை படைத்த ரம்யா பாண்டியன்... ட்ரைலர்லேயே இப்படி மிரட்டிட்டீங்களே!!!
ஒரே படத்திலேயே சாதனை படைத்த ரம்யா பாண்டியன்… ட்ரைலர்லேயே இப்படி மிரட்டிட்டீங்களே!!!

அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கி வரும் இந்த படத்தில் ரம்யா பாண்டியன் கதாநாயகியாக மிதுன் மாணிக்கம் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்து வருகின்றனர். மேலும் இந்த படம் வருகிற 24ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. அதாவது ஆசையாக வளர்க்கும் காளை மாடு காணாமல் போகிறது. அதை கண்டுபிடிக்கும் செயல்களை மையமாக கொண்டு கதை நகர்கிறது. இதில் வாணி போஜன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

இந்த படத்தின் ட்ரைலர் இது வரை 5 மில்லியனுக்கு அதிகமானோரால் பார்க்கப்பட்டு ஒரு பெரிய சாதனையை படைத்து உள்ளது. இதை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு நன்றி தெரிவித்து உள்ளார். முதல் படத்திலேயே மாபெரும் சாதனை படைத்து உள்ளார் என்று கமெண்டு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here