வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!!

0
RED ALERT! மாநிலத்திற்கு தீவிர கனமழை எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
RED ALERT! மாநிலத்திற்கு தீவிர கனமழை எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

கிழக்கு மத்திய, அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல்களின் படி, தமிழகத்தில் நாளை மற்றும் அதற்கு அடுத்த நாள் (13, செப்) கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும் வரும் 14 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.அதாவது அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு மத்திய, அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் 4 நாட்களுக்கு தமிழக மக்கள் பாதுகாப்பா இருக்கணும் - கனமழை எச்சரிக்கை!!

இதனால் அப்பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மத்திய வங்கக்கடல்,  மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் ஆகிய பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here