90 காலகட்டத்தை கலக்கி வந்த அரவிந்த் சாமி மற்றும் பிரபு தேவா காம்போ தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரவிந்த் சாமி, பிரபு தேவா காம்போ
பல ஹிட் படங்களை கொடுத்து வந்த பிரபு தேவா மாஸ்டர் நடனத்தில் மட்டுமல்ல, நாயகனாகவும் களமிறங்கி வந்தார். இவரது படங்கள் தான் பெரும்பாலும் ஹிட் அடிக்கும். அதுவும் அவர் நடித்த மின்சார கனவு திரைப்படம் மாஸ் ஹிட். பல முன்னணி பிரபலங்கள் இதில் இணைந்திருந்தனர்.
அதிலும் அரவிந்த் சாமி இதில் நடித்ததால் இந்த படத்திற்கு மேலும் வரவேற்பு கிடைத்தது. அதுதான் அவர்கள் இணைத்து நடித்த கடைசி திரைப்படமும் ஆகும். இப்பொழுது புதிய தகவல் ஒன்று இணையத்தையே கலக்கி வருகிறது.
அதாவது மாநாடு திரைப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படத்தில் பிரபு தேவா மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்க போகிறார்களாம். அந்த படத்தில் இருவருக்கும் முக்கிய கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளதாம். இந்த அப்டேட்டை கேட்டு பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இது ஒரு மெமோரிஸ் பிரிங் பேக் என்றே சொல்லலாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்