பெண்களுக்காக பெண்களால் பெண்களே இயக்கும் பிங்க் பஸ் – மாநில அரசின் சூப்பர் திட்டம்!!

0

மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களுக்காக பெண்களால் பெண்களே இயக்கும் பிங்க் நிற பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது

பிங்க் பஸ்:

தமிழகத்தில் தற்போதைய அரசு பதவி ஏற்ற பின் மகளிருக்கு சாதாரண கட்டண பேருந்துகளில் பயணம் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  முதலில் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், அதன் பின் இதில் பயனடைபவர்கள் குறித்து தெரிந்து கொள்ள கட்டணமில்லா பயணச்சீட்டு எனப்படும் பயண சீட்டு வழங்கப்பட்டது.  இதனால், பல லட்சம் மகளிர் பயனடைந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்கள் மிகவும் பயன் பெற்று வருகின்றனர். இதே போல் மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கான சிறப்பு திட்டம் ஒன்று அமல் படுத்தப்பட்டுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் என்ற பகுதியில் பெண்களுக்காக பெண்களால் பெண்களே ஓட்டுனர்களாக பணிபுரியும் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இது மன நிம்மதியையும், உற்சாகத்தையும் தருவதாக  பெண் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படும் அந்த பேருந்து பிங்க் நிறத்தில் இருப்பது குறிப்பிடத் தகுந்தது.  இந்த சிறப்பு திட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.  விரைவில் பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படும் பேருந்துகள் அடுத்தடுத்து மாநிலங்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பெண்களுக்கான மிக சிறந்த சேவையாகவும், அவர்களுக்கான புது வேலைவாய்ப்பை உருவாக்கும் தளமாகவும் பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here