புகழை தொடர்ந்து கார் வாங்கி மாஸ் காட்டிய விஜய் டிவி பிரபலம் – புகைப்படம் எடுத்து நெகிழ்ந்த குடும்பத்தினர்!!

0

சின்னத்திரையில் தேன்மொழி BABL என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஜாக்குலின். இவர் முதலில் ஆண்டாள் அழகர் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். பின்னர் கலக்க போவது யாரு என்ற காமெடி ஷோவில் தொகுப்பாளினியாக கலக்கினார்.

இவரின் கரகரத்த குரலை பலபேர் கிண்டல் செய்தாலும் அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாது, தன் கேரியரில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அதுவும் இவர் தேன்மொழி BABL தொடரில் நடிக்க ஆரம்பிக்கும் போது இவருக்கு பல நெகடிவ் கமெண்ட்ஸ் எழுந்தது.

ஆனால் தற்போது இவரின் நடிப்பை பார்த்து இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஜாக்குலின் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் புது காருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

ஜாக்குலினுடன் அவர் அம்மாவும் உடன் உள்ளார். ஏற்கனவே குக் வித் கோமாளி பிரபலம் புகழ் கார் வாங்கி சமூக வலைத்தளங்களில் அந்த செய்தி ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here