விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதி சீரியலில் நாயகியாக நடித்து வரும் நட்சத்திரா போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நட்சத்திரா
தொகுப்பாளினியாக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த நட்சத்திரா பல ஷார்ட் பிலிம் மற்றும் ஆல்பம் சாங் மூலம் பிரபலமானவர். அவர் நடிக்காத ஷார்ட் பிலிம் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஏகப்பட்ட திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர்.
தொகுத்து வழங்குவதிலும் வல்லவர். நடிப்பு நடனத்திலும் சிறந்தவர். இப்படி அவரை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம். சன் டிவியில் நாயகி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நாயகியாகவும் நடித்து கலக்கி இருப்பார். இவர் கால் பாதிக்காத சேனலே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். சன் டிவியில் பிரபல சன் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
மேலும் பல அவார்ட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நாயகியாக உருவெடுத்துள்ளார்.
நாளுக்கு நாள் இவரின் திறமைக்கு வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் அவர் தற்போது வெள்ளை நிற பனியன் அணிந்து இயற்கையுடன் இணைந்து போட்டோஷூட் செய்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்