பரமசுந்தரி பாடலுக்கு மெட்டிஒலி பிரபலத்துடன் இணைந்து குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் – வைரலாகும் வீடியோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான தனம் தற்போது மெட்டிஒலி சீரியல் பிரபலத்துடன் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளார். அந்த விடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்ப கதையம்சத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதால் அனைவர்க்கும் விருப்பமான சீரியலாக மாறியது. மேலும் தனம் தான் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரமே. குடும்பத்திற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளார்.

எந்த ஒரு பெண்ணும் செய்ய துணியாத காரியத்தை செய்து அனைவரின் மனதிலும் நிலையான ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவரின் தேர்ந்த நடிப்பு தான் சீரியலின் பக்கபலமே. சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜின் மகளாக நடித்திருப்பார்.

அப்பொழுது ஆரம்பித்தது இவரின் திரைப்பயணம். மேலும் அஜித்திற்கு தங்கையாக வாலி படத்திலும் நடித்து பிரபலமானார். பல மலையாள படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

வெள்ளித்திரையிலும் கலக்கி வந்த தனம் தற்போது சின்னத்திரையையும் கலக்கி வருகிறார். தெலுங்கிலும் ‘வதினம்மா’ என்ற சீரியலில் முன்னணி ரோலில் நடித்து வருகிறார். தற்போது மெட்டிஒலியில் நடித்த பிரபல நடிகையுடன் இணைந்து பரமசுந்தரி பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். இவருக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம் என்று பலரும் இந்த சீரியலை ஷேர் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here