மாஸ் காட்டும் இன்ஃபோசிஸ்.. 100 பில்லியன் டாலரை தொட்ட சந்தை மதிப்பு!!

0

ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர் என்ற அளவை தொட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.7. 45 லட்சம் கோடி ஆகும். இந்த புதிய உயரத்தை எட்டியிருப்பதன் மூலம், 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட இந்தியாவின் டாப் நிறுவனங்களின் பட்டியலில் இன்ஃபோசிஸ் இணைந்துள்ளது.

இன்றைய (24 ஆகஸ்ட் 2021) வர்த்தகத்தில் தொழில்நுட்ப துறையை சேர்ந்த இன்ஃபோசிஸ் பங்கின் விலை ஒரு சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இதனால் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இன்ஃபோசிஸ் கடந்துள்ளது. இதன் மூலம் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை தொடும் நான்காவது இந்திய நிறுவனம் என்ற இன்ஃபோசிஸ் பெற்றுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு முன்பு இந்த சாதனையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடி கம்பெனியான டிசிஎஸ், ஹெச்.டி.எப்.சி. வங்கி ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனம் வருமான வரித்துறையின் புதிய  வலைதளத்தை வடிவமைத்து வருகிறது. இதனால் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் இன்ஃபோசிஸ் நிறுவனம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here