பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கண்ணன் தற்போது ஜெயிலில் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமாக நடித்து வருபவர் தான் கண்ணன். இதுதான் இவரது முதல் சீரியலும் கூட. ஆனாலும் இது முதல் சீரியல் போல இல்லாமல், தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கென்று தனி ரசிகர்கள் உருவானார்கள்.
ஆரம்பத்தில் இருந்து வீட்டின் கடைக்குட்டியாக இருந்து அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்தார். அனைவரையும் கலாய்த்து கொண்டு கிண்டலடித்து கொண்டிருந்த கண்ணன் தற்போது அதிரடி முடிவாக திருமணம் வரை சென்று விட்டார்.
இது குடும்பத்திற்கே பெரிய ஷாக் தான். தற்போது வரை யாருமே வீட்டில் அவர்களை சேர்த்து கொள்ள வில்லை. தற்போது அண்ணனுக்கு தெரிந்தவர்கள் வந்து தானாக உதவி செய்ய குடிசை வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்த விஷயம் தெரிந்து தான் அனைவரும் நிம்மதியாக உள்ளனர். ஆனாலும் கண்ணன் இப்படி செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவும் இல்லை. இந்நிலையில் தற்போது கண்ணன் ஜெயிலில் இருப்பது போன்ற புகைப்படத்தை பார்த்த பலருக்கும் பெரிய ஷாக். அதன் பிறகு பார்த்தால் அது கைதி ரெஸ்டாரண்ட். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்