ராஜா ராணி 2 – பார்வதியை பழிவாங்க விக்கியுடன் டீல் பேசும் அர்ச்சனா – நடக்கப்போகும் விபரீதம் என்ன??

0

ராஜா ராணி சீரியலில் தற்போது விக்கி மீண்டும் பார்வதியை பழிவாங்க மன்னிப்பு கேட்பதை போல நடிக்கிறார். மேலும் இதனை பார்த்து விடும் அர்ச்சனா பார்வதியை மாட்டிவிட வேறு பிளான் போடுகிறார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிகொண்டுள்ளனர். அப்பொழுது சரவணனுக்காக அனைவரும் காத்துக்கொண்டிருக்க ரவி வீட்டிற்கு வந்து திருமணத்திற்கு சென்றிருப்பதாக சொல்கிறார். அதாவது கடைசி நேரத்தில் ஒரு திருமணத்தில் ஸ்வீட் செய்ய ஆள் தேவைப்பட்டதாகவும் அதனால் வேகமாக அங்கு சென்றதாகவும் சொல்கிறார்.

இதனால் அனைவருமே ஷாக்காகின்றனர். சந்தியாவிற்கு இது என்னவோ போல ஆகிறது. சந்தியாவை பார்த்த சிவகாமி அவருக்கு ஆறுதல் சொல்கிறார். கால் செய்து பேச சொல்கிறார். சந்தியாவும் கால் செய்து பேசுகிறார். அதன் பிறகு தான் அனைவர்க்கும் நிம்மதியாக உள்ளது.

சந்தியாவும் சரவணனை பிரிந்து இருக்க முடியாமல் தவிக்கிறார். மேலும் விக்கியும் பட்டாசும் பார்வதி வீட்டிற்கு இரவில் வருகின்றனர். எப்படியும் பார்வதியை பழி வங்குவேன் என்று வருகிறார். பட்டாசும் அடிவாங்கிய விஷயத்தை சொல்லி பயமுறுத்துகிறார்.

ஆனாலும் விக்கி பார்வதியின் வீட்டில் சுவர் ஏறி குதித்து செல்கிறார். பார்வதியை எழுப்ப விக்கியை பார்த்து ஷாக்காகிறார். இவன் என்ன இந்த நேரத்துல என்று பயப்படுகிறார். வேறு வழியில்லாமல் விக்கியை பார்க்க வெளியே செல்கிறார். அப்பொழுது அர்ச்சனாவும் அங்கு வந்து விட பார்வதி போனை தேடுவதாக பொய் சொல்கிறார்.

மேலும் அர்ச்சனா விக்கி பார்வதி பேசுவதை ஒளிந்து இருந்து பார்க்கிறார். என்ன தைரியம் இவளுக்கு என்று கோவமடைகிறார். விக்கி பார்வதியிடம் மன்னிப்பு கேட்கிறார். தான் தெரியாமல் இப்படி செய்து விட்டதாக சொல்கிறார். இதனால் கோவமடையும் பார்வதி இனிமேல் உன்னை நம்புவதாக இல்லை என்றும், இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தால் கண்டிப்பாக சத்தம் போட்டு அனைவரையும் எழுப்பி விடுவேன் என்றும் சொல்கிறார்.

இவை அனைத்தையும் கேட்டு விடும் அர்ச்சனா வாசல் பக்கமாக வந்து விக்கியின் போனை பிடுங்குகிறார். நடந்த உண்மையை சொல்ல சொல்லி மிரட்டுகிறார். விக்கியும் நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்கிறார்.

இதனால் கோவமடையும் அர்ச்சனா இத்தனை நாள் எவளோ பெரிய விஷயத்தை நம்மகிட்ட இருந்து மறைச்சுட்டாங்க என்று சொல்கிறார். மேலும் பார்வதியை பழி வாங்க சில விஷயங்களை செய்ய சொல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here