இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து… யாருக்காக பாடுறீங்க ஷிவாங்கி!!!

0
ஏம்மா ஷிவாங்கி.. Shopping Mall-ல செய்யுற வேலையா இது - வீடியோ பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரசிகர்கள்!

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தெகிடி படத்தில் இடம் பெற்ற விண்மீன் விதையில் என தொடங்கும் பாடலை செம அழகாக பாடி அசத்தி உள்ளார்.

சூப்பர் சிங்கர் என்ற மியூசிக் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் ஷிவாங்கி. அந்த நிகழ்ச்சியில் தனது இனிமையான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் பசங்க படத்தில் ஒரு பாடலையும் பாடி உள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சி மூலம் அவரின் இரு வேறுபட்ட குரல்கள் வெளிப்பட்டது. அந்த குரலால் பல கேலி கிண்டலுக்கு ஆளானார். அதன் பிறகு அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக நுழைந்தார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் செய்யும் சேட்டைகள், புகழுடன் அவர் அடிக்கும் லூட்டிகள், அஸ்வின் உடன் செய்யும் காதல் சேட்டைகள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று. மேலும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒன்றாகும். மேலும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளது. மேலும் இவர் தற்போது டான் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோவில் தெகிடி படத்தில் இடம் பெற்ற விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் என்ற பாடலை தன்னுடைய இனிமையான குரல் மூலம் பாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது பல லைக்ஸ்களை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here