சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலில் நடிக்கும் நடிகைகள் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
ரோஜா சீரியல்
ரோஜா சீரியலில் தொடர்ந்து ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் அர்ஜுன் ரோஜாவை காப்பாற்ற தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வருகிறார். ரோஜாவை கொல்ல ஜெயிலில் சாக்ஷி திட்டங்களை போட்டு வருகிறார்.
டைகர் மாணிக்கமும் இதற்கு உறுதுணையாக உள்ளார். அணு நடிக்கிறார் என்று தெரியாமல் ரோஜாவை கொல்ல முயற்சி செய்து வருகிறார். ரோஜா தன் மகள் தான் என்ற உண்மை தெரிய வந்தால் இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்குமோ?? என்ற சஸ்பென்ஸ் அதிகமாக இருந்து வருகிறது.
ரோஜா ஜெயிலில் இருந்து எப்பொழுது வெளியே வருவார். அனுவின் இந்த நடிப்பு எப்பொழுது அம்பலமாகும் என்ற விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் ரோஜா சீரியல் நடிகைகள் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் ஜாலியாக ஆடி பாடி ரீல்ஸ் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்