டிடிக்கு மீண்டும் வாய்ப்பளித்த விஜய் டிவி.. அதுவும் இதுனால தான்!!

0
விஜய் டிவி தொகுப்பாளினி என்றவுடன் அனைவரின் மனதிலும் முதல் தோன்றுபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் டிவியில் இவர் இல்லாத ஷோக்களை காண முடியாது. விருது வழங்கும் நிகழ்ச்சியினாலும் சரி, சாதாரண சீரியல் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி இவரே தான் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
பின்னர் டிடி தன் ஆண் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரின் திருமண வாழ்கை அவருக்கு சரியாக கைகொடுக்கவில்லை. சிறிது வருடங்களுக்கு பின்னர் இருவரும் பிரிந்தனர். தன் கணவரை பிரிந்த பின்பும் விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக தன் காலில் ஏற்பட்ட காயத்தால் சின்னதிரைக்கு சிறிது பிரேக் விட்டார் டிடி. அதை தொடர்ந்து தற்போது வரை இவரை முன்பு போல் டிவி நிகழ்ச்சிகளில் இவரை காண முடிவதில்லை. ஆனால் தற்போது விஜய் டிவியின் சூப்பர் நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது காபி வித் டிடி நிகழ்ச்சியை மீண்டும் டிடி தொகுத்து வழங்கவுள்ளார். அதில் சிறப்பு விருந்தினராக நயன்தாரா கலந்து கொள்ளவுள்ளாராம். நெற்றிக்கண் படத்தின் ப்ரோமோஷனிற்காக நயன்தாராவின் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here