உடலுக்கு அதிக சத்துக்களை அளிக்க கூடியது தான் மட்டன். தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களும் சமையலுக்கு பயன்படுத்தபடுகிறது. மேலும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. தற்போது இந்த ஹெல்தியான மட்டனை வைத்து சுவையான மட்டன் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் – 1/2 கி
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மல்லி – 1 தேக்கரண்டி
வரமிளகாய் – 10
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் மட்டனை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். அதனை குக்கரில் விசில் போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மிளகு, சீரகம், வரமிளகாய், மல்லி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
இப்பொழுது அதனை நன்கு அரைத்து கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். இப்பொழுது வேகவைத்த மட்டனை அதில் சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
இப்பொழுது அடுப்பை சிறிதாக வைத்து மட்டனை மூடி வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மட்டன் சுக்கா ரெசிபி தயார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்