விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் தனது கல்லூரி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அறந்தாங்கி நிஷா
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் மனதில் இடம் பிடித்தவர் தான் நிஷா. மேடை பேச்சு, காமெடி என பல திறமைகளை உள்ளடக்கி வைத்திருப்பவர். தன்னை தானே குறைப்படுத்தி பேசியே அனைவரையும் சிரிக்க வைக்க ஆரம்பித்தார்.
இவரது கணவரும் இவருக்கு அதிக பக்கபலமாக இருந்து வருகிறார். அதன் பிறகு தான் அவருக்கு விஜய் டிவியில் பல வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தொகுப்பாளினியாக களமிறங்கினார்.
மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இவ்வளவு தூரம் சேர்த்து வைத்த பெயரை எல்லாம் ஒரேடியாக குலைக்கும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்டார். அனைவரின் வெறுப்புக்கும் ஆளானார். வெற்றி பெற்றே தீருவேன் என்று உள்ளே வந்த நிஷா மனமுடைந்து தான் வீட்டை விட்டு வெளியேறினார்.
இவருக்கு பல நெகடிவ் கமண்ட்ஸ் வந்துகொண்டே தான் இருந்தது. ஆனாலும் தற்போது பழைய நிஷாவாக உருமாறி வருகிறார். இப்பொழுது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தி வருகிறார்.
இந்நிலையில் நண்பர்கள் தின விழாவை முன்னிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் கல்லூரி வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நம்ம நிஷாவா இது?? என்று ஆச்சரியப்படும் வகையில் அந்த போட்டோ இருந்ததை அடுத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்