தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த பல வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா பற்றி ரசிகர் ஒரு லைவ் சாட்டின் போது கேட்ட ஒரு கேள்விக்கு விக்னேஷ் சிவன் ஓப்பனாக ஒரு பதிலை கூறி ரசிகர்களை அசர வைத்து உள்ளார்.
ஐயா படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தவர் நடிகை நயன்தாரா. மேலும் அவருக்கு இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல சோதனைகள் மற்றும் விமர்சங்களை கடந்த தன்னை ஒரு முன்னணி நடிகையாக மாற்றி கொண்டார். அதாவது வளர்ந்து வரும் நடிகைகளுக்கு, நடிப்பிற்கு ஒரு முன்னுதாரணமாக கூறும் அளவிற்கு தன்னை மாற்றிக் கொண்டவர்.
இந்நிலையில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனருடன் காதல் வயப்பட்டு, அன்றிலிருந்து தற்போது வரை காதலித்து வருகின்றனர். மேலும் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் நயன்தாரா பிஸியாக இருப்பதால் திருமண பேச்சை தற்போதைக்கு தள்ளிப்போட்டு உள்ளார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது காதலி நயன்தாரா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு ரசிகர்கள் உடன் லைவ் சாட்டிங் மூலம் உரையாடினார். அப்போது ரசிகர்கள் நயன்தாரா பற்றி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கோபப்படாமல் மிகவும் பொறுமையாக பதில் கூறியுள்ளார்.
இப்படி ஒரு ரசிகர், நயன்தாராவுக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் ஒரு தனிப்பட்ட ரகசியத்தை சொல்லுமாறு கேட்க, அதற்கு விக்னேஷ் சிவன், இரவு உணவிற்கு பிறகு அவரே அனைத்து பாத்திரங்களை கழுவி வைத்து விடுவார் என தனது பதிலை கூறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்