குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

சின்ன திரையில் சீரியல்கள் விரும்பி பார்க்கப்படுவது போலயே ரியாலிட்டி ஷோகளும், சமையல் நிகழ்ச்சிகளும் விரும்பி பார்க்கப்படும். அதுவும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

அந்த வகையில் விஜய் டிவி TRP யை உச்சத்திற்கு கொண்டு சென்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதில் நடுவர்களாக செப் தாமு, வெங்கடேஷ் பாட் கலந்து கொள்ள தொகுப்பாளராக ரக்ஷன் இருந்தார். இவர்களை போலவே இந்த நிகழ்ச்சிக்கு மற்றொரு பெரிய தூண் என்றால் அது போட்டியாளர்களும் கோமாளிகளும் தான்.

சீசன் 2 இல் போட்டியாளர்களாக அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா, ஷகிலா, தர்ஷா குப்தா, தீபா, மதுரை முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். அதே போல கோமாளிகளாக ஷிவாங்கி, புகழ், சரத், தங்க துறை, சுனிதா, மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை வேற லெவலுக்கு எடுத்து சென்றனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் கனி வெற்றி பெற்றார்.

இந்நிகழ்ச்சியை பிரிய மனமில்லாத மக்கள் மறுஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி சீசன் 2 எபிசோடுகளை கூட விடாமல் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி ரசிகர்களுக்காக விஜய் டிவி குக் வித் கோமாளி 2 கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை அண்மையில் படமாக்கியுள்ளது.

அந்நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட அஸ்வின் மற்றும் ரித்விகா புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் அந்நிகழ்ச்சியை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here