கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 75% கட்டணம் வசூலிக்க வேண்டும் – 6 தவணையாக கட்டணம் செலுத்தலாம்!!!

0
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 75% கட்டணம் வசூலிக்க வேண்டும் - 6 தவணையாக கட்டணம் செலுத்தலாம்!!!
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 75% கட்டணம் வசூலிக்க வேண்டும் - 6 தவணையாக கட்டணம் செலுத்தலாம்!!!

கொரோனா ஊரடங்கு பேரிடர் காலத்தில் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை ஆன்லைன் மூலமே பயின்று வந்தனர். ஆனால் கல்வி நிறுவனங்கள் பள்ளி கட்டணத்தை முழுமையாக வசூலித்து வருவதாக புகார் வந்தது அதை தொடர்ந்து அரசும் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில் இப்பொழுது கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலையில்லாமல் கஷ்டப்பட்ட பெற்றோர்களின் மாணவர்களுக்கு மட்டும் சலுகை அளித்துள்ளது உயர் நீதிமன்றம்.

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண சலுகை…

கொரோனா ஊரடங்கால் உயிர் பலிகள் மட்டுமல்லாது பொருளாதார வீழ்ச்சியும், சிறு குறு தோழிகளும் பாதிக்கப்பட்டன. இதற்கிடையில் மாணவர்களின் கல்வி கட்டணங்கள் அதிகம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்றம் தனியார் பள்ளி மாணவர்களிடம் பள்ளி கட்டணம் வசூலிக்க கடந்த ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. அதன்பின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் மாணவர்களிடம் இருந்து 75% கட்டணத்தை 40% மற்றும் 35% என இரு தவணையாக பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. மீண்டும் தனியார் பள்ளிகள் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அதில் தனியார் பள்ளிகள் சார்பாக வழக்கறிஞர் ஆஜர் ஆகி வாதாடினார்கள். அதில் தனியார் பள்ளிகள் 85% கட்டணத்தை வசூலித்துக் கொண்டால்தான் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் சம்பளம் போன்றவற்றை வழங்க முடியும் என்று கூறியிருந்தனர்.

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண சலுகை...
தனியார் பள்ளிகள் கல்வி கட்டண சலுகை…

அதனால் உச்ச நீதிமன்றம் 85% கட்டணத்தை வசூலித்துக்கொள்ள அனுமதியளித்தது. இந்நிலையில் தமிழக அரசுத்தரப்பில் வழக்கறிஞர் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜரானர். அதில் நடப்பு (2021-22) கல்வியாண்டிலும் 2019-20ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து ஜூலை 5ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது. தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணயக் குழு அளித்த பரிந்துரைகளையே அரசு பரிசீலிக்கும் என்று உறுதியளித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த பள்ளி கட்டணத்தை கொரோனா ஊரடங்கின் பொது வேலையில்லாமல் மிகவும் கஷ்டப்பட பெற்றோர்களிடம் இருந்து 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் இந்த 75% கல்வி கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண சலுகை...
தனியார் பள்ளிகள் கல்வி கட்டண சலுகை…

2022ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதியை கடைசி தவணையாக எடுத்து கொள்ள வேண்டும். அதற்குள் கட்டணத்தை செலுத்தி விட வேண்டும். பள்ளி கட்டணம் கட்டாத காரணத்தால் மாணவர்களை வகுப்பில் அனுமதிக்காமல் இருக்க கூடாது. அப்படி ஏதேனும் புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை மூலம் எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து பயில முடியாத முடியாத மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து சேர்க்க கல்வியை பயில தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here