கோல் இந்தியாவை மிஞ்சிய பேடிஎம்.. IPO மூலம் ரூ.16,600 கோடி திரட்ட விண்ணப்பம்!!!

0

இந்தியாவின் ஆன்லைன் பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் IPO மூலம் 16,600 கோடி ரூபாய் திரட்ட விண்ணப்பித்துள்ளது. இதன் மூலம் 2010 ஆம் ஆண்டு IPO மூலம் 15,000 கோடி திரட்டிய கோல் இந்தியாவை பேடிஎம் மிஞ்சியுள்ளது.

தற்போது அனைத்து தேவைகளையும் மனிதன் ஸ்மார்ட் போன்கள் மூலம் விரல் நுனியில் பெறலாம். அதற்கு உதவி செய்வது ஆன்லைன் பண பரிவர்த்தனை நிறுவனங்கள். அதிலும் கொரோனா தொற்று பேரிடர் ஏற்பட்டத்திலிருந்தே இந்த நிறுவனங்களுக்கு அதிக டிமெண்ட். மொபைல் ரிசார்ஜ் முதல் கேஸ் சிலிண்டர் புக் செய்வது வரை மக்கள் ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகளை சார்ந்து உள்ளனர்.

அதே போல 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பேடிஎம் நிறுவனமும் இந்திய மக்களால் பெரிதும் உபயோகிக்க கூடிய ஆன்லைன் பண பரிவர்த்தனை நிறுவனங்களில் ஒன்று. ஏற்கனவே IPO மூலம் 16,600 கோடி ரூபாய் திரட்ட பேடிஎம் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி இருந்தார்கள். தற்போது அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த IPO விற்பனைக்கு விண்ணப்பித்துள்ளது.  இதன் மூலம் 2010 ஆம் ஆண்டு IPO மூலம் 15,000 கோடி திரட்டிய கோல் இந்தியாவை பேடிஎம் முந்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here