உலக நாயகனின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம்…!விக்ரம் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!!!

0

உலகநாயகன் அவர்களின் அடுத்த படமான விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று எளிய முறையில் பூஜை உடன் ஆரம்பித்து உள்ளது. இதில் கமல், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள படம்  விக்ரம். இந்த படத்தை மாஸ்டர் படத்தை இயக்கி வெற்றி வாகை சூடிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். மேலும் இந்த படம் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் வெளிவர இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஒருவித ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இதோடு இல்லாமல் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பல முன்னனி திரை பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

மேலும் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த போஸ்டரில் கமல், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் ஆகியோரின் தோற்றமே இந்த படத்திற்கான எதிர்பார்பை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் இதில் கமல் அவர்களின் கதாபாத்திரம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. மேலும் இந்த பூஜையில் அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல், விஜய் சேதுபதி மற்றும் பலர் கலந்து கொண்டு உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here