பிக் பாஸ் வனிதாவின் தங்கை ஸ்ரீ தேவிக்கு இவ்வளவு பெரிய மகளா?? எப்படி இருக்காங்கனு பாருங்கள்!!

0

நடிகர் விஜய் குமாரின் மகள் மற்றும் நடிகையாகிய ஸ்ரீ தேவி தற்போது தனது மகள் பிறந்தநாளில் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீ தேவி விஜயகுமார்

நடிகர் விஜயகுமாரின் கடைசி மகள் தான் ஸ்ரீ தேவி. குழந்தை நட்சத்திராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர். ஆரம்பத்தில் சத்யராஜுடன் ரிக்ஷா மாமா என்ற படத்தில் நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார்.

அதன் பிறகு அடுத்தடுத்து படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தது. குழந்தை நட்சத்திரமாகவே 5 படங்களுக்கு மேல் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகில் தான் நாயகியாக முதன்முதலில் கால் பதித்தார்.

அதன் பிறகு தான் காதல் வைரஸ் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் வெற்றியை தரவில்லை. பின்பு தான் அவர் பிரியமான தோழி பாதத்தில் நடித்து அதிக புகழை பெற்றார்.

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கலக்கினார். நடிக்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே திருமணம் செய்துகொண்டார். சோசியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய பிரபலமாக இருக்கும் வனிதாவின் தங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வனிதாவின் பிரச்சனையில் அவரது குடும்பத்தினர் ஒரு வார்த்தை கூட எதுவும் கேட்கவும் இல்லை. தலையிடவும் இல்லை. தற்போது ஸ்ரீதேவி தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here