காரசாரமான சிக்கன் மசாலா ரெசிபி – மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!

0

சிக்கன் என்றாலே மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு தான். சிறுவர்கள் முதல் வர்கள் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடித்த உணவும் கூட. தற்போது சிக்கனை வைத்து சுவையான கிரேவி எப்படி செய்வது என்று பாப்போம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கி

தக்காளி – 2

பெரிய வெங்காயம் – 2

பச்சைமிளகாய் – 5

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கனை நன்கு மஞ்சள்தூள் சேர்த்து கழுவி எடுத்து கொள்ளவும். அதன் பிறகு அதில் சிறிது தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் உடன் கலந்து அதில் சேர்க்கவும்.

அதன் பிறகு ஒரு தக்காளியை அதில் பிழிந்து கொள்ளவும். இதனை 1 மணி நேரம் வரை நன்கு ஊறவைக்கவும். அதன் பிறகு ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு சேர்த்து வறுத்து அதன் பின் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்க்கவும்.

நனவு வதங்கியதும் மீதமிருக்கும் ஒரு தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இப்பொழுது ஊறவைத்து எடுத்து வைத்துள்ள சிக்கனை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். சிக்கன் நன்கு வதங்கியதும் தண்ணீர் விட்டு சுண்டியதும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here