தினமும் அதன் விலையை ஏற்றி மக்களை அச்சுறுத்தி வருகின்றன இந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை. இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்த வித மாற்றமின்றி நேற்றைய விலையிலையே தொடர்ந்து நீடிக்கிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகுந்த அமைதியாக இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை. அதன் பரவல் குறைந்ததும் மெல்ல மெல்ல அதிகரித்து தற்போது உச்சத்தை அடைந்து விட்டது. இந்த விலை ஏற்றம் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் தங்களின் அன்றாட தேவைக்கு தங்களின் வாகங்களையே நம்பி இருக்கும் நிலையில் இந்த விலை ஏற்றம் அவர்களின் சம்பாத்தியத்தில் ஒரு பங்கு இதற்கே போவதாக மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலையே விற்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99.80ரூபாய்க்கும் ,ஒரு லிட்டர் டீசல் 93.72ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்