அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ‘ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்’ என்ற நிறுவனம் பிரமாண்ட பலூனில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல உள்ளது. மேலும் இதனுடைய ஒரு டிக்கெட் விலை 1 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது.
ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ், இது ஒரு விண்வெளி சுற்றுலா நிறுவனம் ஆகும். இது தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து சென்று பூமியின் அழகை விண்ணில் இருந்து ரசிக்கும் ஒரு வாய்ப்பை தர உள்ளது. இதற்கான சோதனை பயணம் ஜூன் 18 ஆம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்த நிருவனம் 2024 ஆம் ஆண்டு, இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பலூனில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறது. இதற்கான முன்பதிவு தற்போது ஆரம்பம் ஆகியுள்ளது. இது 6 மணி நேர விண்வெளி பயணம் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த விண்வெளி பயணத்தின் 1 டிக்கெட்டின் விலை 1 கோடி ரூபாய் என நிர்ணயித்து உள்ளது. இந்த பயணத்தின் போது ஒரு பயணத்தில் கேப்டன் உட்பட 8 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்