ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த தமிழக மாணவன்…!ஒரு நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணம் போட்டு சாதனை!!!

0

கொடைக்கானல் சேர்ந்த பள்ளி மாணவர் பிரசன்னா ஒரு நிமிடத்திற்கு 88 முறை தோப்புக்கரணம் போட்டு ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து உள்ளார். ஏற்கனவே அவர் செய்த அதாவது ஒரு நிமிடத்திற்கு 82 முறை தோப்புக்கரணம் செய்த சாதனையை இந்த சாதனையை முறியடித்து உள்ளது.

கொடைக்கானல் உள்ள லாஸ்காட் பகுதியை சேர்ந்த அஜய்சேட்டன் என்பவரின் மகன்  பிரசன்னா   12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது  சிறு வயது முதலே தோப்புக்கரணம் போடுவதில் ஆர்வம் காட்டி வந்து உள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் ,தினமும் தோப்புக்கரணம் போடுவதால் இரத்த ஓட்டம் மற்றும் உடல் வெப்பநிலை சீராக இருக்கும் என்றும், இதுவும் ஒரு வகை யோகா எனவும் கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் ஞாபக திறன் அதிகரிக்கும். இதனால் படிப்பு உட்பட  அனைத்து  வித செயல்பாடுகளையும் திறமையாக செயல்பட முடியும்  என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இவர் ஒரு நிமிடத்திற்கு 82 முறை தோப்புக்கரணம் செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றார். இதனையடுத்து தற்போது ஒரு நிமிடத்திற்கு 88 முறை தோப்புக்கரணம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து அதனை மின்னஞ்சல் மூலம் ஆசியா புக்  ஆஃப்  ரெக்கார்ட்ஸ்-க்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை ஆராய்ந்து அந்த அமைப்பு அவரது சாதனையை பாராட்டி அவருக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் அவரின் முந்தைய  சாதனையை அவரே முறியடித்து உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here