முகக்கவசம் அணிய முடியாது அபராதம் கட்ட முடியாது – போலீசை அவதூறாக திட்டிய அரசு பெண் ஊழியர்!!!

0
முகக்கவசம் அணிய முடியாது அபராதம் கட்ட முடியாது - போலீசை அவதூறாக திட்டிய அரசு பெண் ஊழியர்!!!
முகக்கவசம் அணிய முடியாது அபராதம் கட்ட முடியாது - போலீசை அவதூறாக திட்டிய அரசு பெண் ஊழியர்!!!

கடந்த சில நாட்களாக போலீசாருக்கும் பொதுமக்களும் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. தினமும் எதாவது ஒரு விதத்திலும் எதாவது ஒரு ஊரில் போலீசாரும் பொதுமக்களும் மோதிக்கொள்கின்றனர். ஆமாம் அதேபோலத்தான் காரைக்கால் மாவட்டத்தில் அரசு பெண் ஊழியர் ஒருவர் ஈடுப்பட்டு தரைகுறைவாக பேசியது பெரும் பரவலாகி வருகிறது.

மாஸ்க் அணிய முடியாது அபராதம் கட்டமாட்டேன்

கொரோனா தொற்று பரவல் அதிகம் பரவி வருகிறது அதனால் நோயை கட்டுப்படுத்த அரசு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளன அதில் மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் வெளியூர் செல்பவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்றுஅறிவித்துள்ளது. அப்படி விதியை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் இங்கு ஒருவர் அரசின் விதிமுறையும் பின்பற்றாமல் அதை மீறியுள்ளார் அபராதமும் கட்ட மறுத்துள்ளார்.

காவலரை அவதூறாக பேசிய அரசு பெண் ஊழியர்…

புதுச்சேரியில் உள்ள மாவட்டம் காரைக்கால் அங்கு ஒரு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் ஊரடங்கை பின்பற்றி வருகின்ற நிலையில் நேற்று போலீசார் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களையும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்களயும் மற்றும் முகக்கவசம் அணியாதவர்களையும் சோதனை சாவடியில் இருந்து சோதனை செய்து கொண்டு இருந்தனர். அந்நேரம் அந்த வழியாக பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமலும் ஹெல்மெட் போடாமலும் வந்துள்ளார், அவரை பெண் காவலர் தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாமல் வருகிறீர்கள் என்று கூறி அவருக்கு அபராதம் விதித்துள்ளார், ஆனால் அந்த பெண் நான் என் மாஸ்க் அணிய வேண்டும் எனக்கு கொரோனாலா வராது நான் ஏன் அபாரதம் கட்ட வேண்டும் அதுலா கட்ட முடியாது நான் யாரு தெரியுமா நான் அரசு ஊழியர் சுகாதாரத்துறை உதவியாளராக பணியாற்றுகிறேன் என்றும் மாஸ்க் இல்லாவிட்டால் அபராதம் கட்ட வேண்டுமா யார் சொன்னது என்று கேட்டுள்ளார்,

காவலரை அவதூறாக பேசிய அரசு பெண் ஊழியர்...
காவலரை அவதூறாக பேசிய அரசு பெண் ஊழியர்…

அதற்க்கு அந்த பெண் காவலர் மாவட்ட கலெக்டர் தான் கூறியுள்ளார் என்று சொன்னது இருவருக்கும் சண்டை முத்திவிட்டது. இருவரும் பெண்கள் என்பதால் செல்லாமல் அவர்களது சண்டையை போனில் வீடியோ ரெகார்ட் செய்த இன்னொரு காவலரை அந்த பெண் சனியன் லூசு என் வீடியோ எடுக்குற அத எடுத்த என பண்ணப்போற என்று அவதூறாக பேசியுள்ளார், பின் சிறிது நேரம் பின் அவருக்கு ரூபாய்.100 அபராதம் விதித்து அதை காட்டுமாறு கேட்டுள்ளனர் பின் அந்த அரசு ஊழியரும் அபராதத்தை கட்டிவிட்டு சென்றார்.இந்த 100ரூபாயை கேட்டதும் கட்டியிருந்தாள் இவ்ளோவு வாக்குவாதம் சண்டைகள் வந்திருக்காது. நமது நலனுக்காகத்தான் அரசு விதிமுறைகளை கொண்டு வருகிறது எனவே விதிமுறைகளை பின்பற்றி நோயில்லா நாடக மாற்றுவோமே…

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here