விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி உள்ள சீரியலான தமிழும், சரஸ்வதியும் சீரியல் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழும் சரஸ்வதியும்
விஜய் டிவியில் ஏற்கனவே பல சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் புதிதாக இணையவுள்ளது. இந்த செய்தி பல மாதங்களாக இணையத்தில் உலா வந்த நிலையில் நேற்று தான் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இதில் தீபக் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் முழுவதுமாக இருந்தது தீபக். டிடி தான். தற்போது தீபக் மீண்டும் இந்த சீரியலில் இணைந்துள்ளது அனைவர்க்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரது காதலும் துளிர்த்தது விஜய் டிவியில் தான்.
அதன் பிறகு அவர் சன் டிவியிலும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த தென்றல் சீரியலில் நடித்து அசத்தினார். அதுவும் குமரன்+விகடன் காம்போ தான். இந்த காம்போ மீண்டும் தொடங்கியுள்ளது. அதுவும் விஜய் டிவியில்.
மேலும் தெய்வமகள் சீரியல் வில்லியான காயத்ரியும், சித்தி சீரியல் வில்லியான யாழினியும் இந்த சீரியலில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.