எனக்கே அவர பாக்கனும் போல இருக்கு… 2800 ரூபாய் பில்லுக்கு 11 லட்சம் டிப்ஸ் கொடுத்த கஸ்டமர்..

0

அமெரிக்காவில் உள்ள ஒரு ரெஸ்ட்ராண்ட்டில் கஸ்டமர் ஒருவர் 2800 ரூபாய் பில்லுக்கு 11.8 லட்ச ரூபாயை டிப்ஸாக கொடுத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் ஸ்டம்பில் இன் பார் & கிரில் இன் லண்டன்டெர்ரி என்ற ரெஸ்ட்ராண்ட் ஒன்று இயங்கிவருகிறது. அந்த உணவகத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கஸ்டமர் ஒருவர் வந்து, ஒரு பீரும் அதற்கு சைடு டிஷும் ஆர்டர் செய்துள்ளார்.

பின்னர் அந்த ரெஸ்ட்ராண்டை விட்டு கிளப்பும்போது, அவரின் பில் தொகை எவ்வளவு என்று ரெஸ்ட்ராண்ட் ஊழியரிடம் கேட்டுள்ளார். அவருக்கு வந்த பில் என்னவோ 38 டாலர்கள் (ரூ. 2800) தான். ஆனால் அவர் அந்த ஊழியரிடம் 16,000 டாலர்கள் (ரூ.11.8 லட்சம்) கொடுத்து சென்றுள்ளார்.

அந்த ரெஸ்ட்ராண்ட் உரிமையாளர் இந்த சம்பவத்தையும், அந்த கஸ்டமரின் பில்லையும் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து, உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. நீங்கள் அளித்த பணம் ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here