விஜய் தொலைகாட்சியில் பிக் பாஸ் பிரபலங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி பிபி ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது நடுவர் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் கடுப்பாகி புகழை திட்டியுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பிபி ஜோடிகள்:
விஜய் தொலைக்காட்சியில் தற்போது புதிதாக பிபி ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களில் கலந்துகொண்ட அனைத்து பிரபலங்களும் போட்டியாளராக கலந்துள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பிரபல முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகரும் பாடகருமான நகுல் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாராவில் காரணமாக நிறுத்தப்பட இந்த நிகழ்ச்சி தஹ்ரபோது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் செம பேமஸாக நினைத்த நிகழ்ச்சி குழுவினர் இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி புகழ், பழைய ஜோக் தங்கதுரை, குரேஷி போன்றவர்களை களமிறக்கியது. இந்த நிகழ்ச்சியில் இவர்கள் செய்யும் அலப்பறைகள் அனைத்தும் மக்களை சிரிக்க வைத்து வருகிறது.
தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடுவர் ரம்யா கிருஷ்ணன் செம கடுப்பாகி புகழை கண்டபடி திட்டினார். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு வழக்கம் போல் இது நகைச்சுவைக்காக நடந்த செயல் போல் ரம்யா கிருஷ்ணன் சிறிது நேரத்திலே சிரிக்க தொடங்கிவிட்டார். தற்போது இந்த ப்ரோமோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.