ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்கான புதிய விதிமுறைகள்…! – எஸ்.பி.ஐ அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி !!!

0

ஸ்டேட் பேங்க் ஆப்  இந்தியா எனப்படும் பொது துறை வங்கி பணம் எடுப்பதற்கான ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது தனது ஏடிஎம்கள் மற்றும் எஸ்.பி.ஐ வங்கிகள் ,அதன் கிளைகள் வாயிலாக பணம் எடுக்கப்படும் போது அதற்கான சேவை கட்டணத்திற்கான புதிய விதிமுறைகளை  அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகளானது ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளது.

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தனது ஏடிஎம் கார்டுகள் மூலமாக ஏடிஎம்மிலோ அல்லது வங்கியின் கிளைகள் மூலமாகவோ ஒரே மாதத்தில் நான்கு  முறைக்கு அதிகமாக பணம் எடுத்தால் அவர்களுக்கு சேவை கட்டணமாக 15 மற்றும் ஜிஎஸ்டி வரியுடன்  சேர்த்து அவர்களின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்து உள்ளது. அதாவது, எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் நான்கு முறை இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம், 5 வது முறையிலிருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு  பரிவர்த்தனைக்கும் 15 மற்றும் ஜிஎஸ்டோடு சேவை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

மேலும் எஸ்பிஐயின் காசோலை புத்தகத்திற்கான தொகையையும் அறிவித்துள்ளது. அதாவது, நிதியாண்டில் முதலில் வழங்கப்படும் 10 தாள்களை கொண்ட காசோலையை தவிர்த்து அதன் பிறகு பெறப்படும் காசோலைகளுக்கு ரூ.40 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என அறிவித்து உள்ளது. மேலும் இது போன்ற பல அறிவிப்புகளை எஸ்.பி.ஐ அறிவித்து உள்ளது. இது மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here