ஆதார் கார்டுல கூட அழகா இருப்பிங்க போலயே… பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ!!!

0
காதலன் வற்புறுத்தலால் உயிரை பணயம் வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் - வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

நடிகை பிரியா பவானி ஷங்கர் இந்த ஊரடங்கு காலத்திலும் ஜிம், ஒர்க்  அவுட்  என தன்னை பிட் ஆக வைத்திருப்பவர். தற்போது ஜிம்மில் உடற் பயிற்சி செய்யும் போது துளி கூட மேக்கப் இல்லாமல் எடுக்கப்பட்ட பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிரியா பவானி ஷங்கர்:

சினிமாவிற்கு வருவதற்கு முன்பே சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் பிரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கியவர், விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். பின்னர் `மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் எஸ். ஜெ. சூர்யாவுடன் மான்ஸ்டர், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில்  நடித்தார். தற்போது இவர் இந்தியன் 2, பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகிகளுக்கு உண்டான முக்கியத்துவம், இவருக்கு தமிழ் ரசிகர்களால் வழங்கபடுகிறது. மிக குறுகிய காலத்தில் இவர் அடைந்த வளர்ச்சி சின்ன திரையிலிருந்து சினிமாவில் முன்னேற துடிக்கும் ஒவோருக்கும் முன் உதாரணமாக உள்ளது.

தற்போது இவர் ஜிம்மில் ஒர்க்  அவுட் செய்யும் போது துளி கூட மேக்கப் இல்லாமல் எடுக்கப்பட்ட பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here