விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகையின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா நடிகை
20k காலம் ஆரம்பித்தும் 90ஸ் காலங்களில் அனுபவித்த சில விஷயங்கள் தற்போது வரை நிலைத்து தான் உள்ளன. ஏனெனில் இப்பொழுது எவ்வளவு தான் டெக்னாலஜி உயர்ந்திருந்தாலும் அப்பொழுது இருந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட சந்தோசம் தான்.
அப்பொழுது வெளியான சீரியல்கள் மக்கள் மத்தியில் தற்போது வரை நிலைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சில நடிகர்கள் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருந்தனர். விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், ஸ்ரீ போன்றோர் எல்லாம் ரசிகர்களின் கனவு நாயகனாக இருந்தவர்கள்.
மேலும் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் சுமதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நீபா பல சீரியல்களில் நடித்தவர். மேலும் வெள்ளித்திரையில் கால் பதித்தவர். நீண்ட நாட்களாக சினிமாவிற்கு பிரேக் விட்டிருந்த அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சியில் தனது குழந்தையுடன் கலந்துகொண்டார்.
அதன் பிறகு தான் பாரதி கண்ணம்மா சீரியலில் இடையில் அறிமுகமானார். மேலும் சில பெண்கள் வீட்டில் படும் அவஸ்தைகள் யாவும் இந்த சீரியலில் கட்டப்பட்டுள்ளதால் தான் இந்த சீரியல் மாஸ் ஹிட்.
தற்போது கண்ணம்மாவுடம் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சஞ்சீவ், ஸ்ரீ, நீபா எடுத்து கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மெமோரிஸ் பிரிங் பேக் என்று ஷேர் செய்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்