பார்த்தால் பத்திக்கும் அழகில் விஜய் சேதுபதி பட நாயகி… மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் !!!

0

பிரேமம் படத்தில் 3 ஹீரோயின்களுள் ஒருவராக நடித்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். மலையாள மொழி மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். அவ்வப்போது தனது அழகும் கொஞ்சும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். தற்போது  அவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் அழகிய பிங்க் புடவையில் தோற்றமளிக்கிறார்.

மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் திரைப்பயணத்தை  தொடங்கியவர் நடிகை மடோனா செபாஸ்டியன். அந்த படம் மலையாளத்தில் மிகுந்த வரவேற்பையும் வெற்றியையும் தேடி தந்தது. அதற்கு அந்த மொழி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருந்தனர். அதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன் பின் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து உள்ளார். தமிழில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட கவண் படத்தின் மூலம் மீண்டும் விஜய் சேதுபதி உடன் ஜோடி சேர்ந்தார். இந்த படத்தில் மலர் என்ற பெயரில் தொலைக்காட்சி ஒன்றின் ஊழியராகவும், விஜய் சேதுபதியின் காதலியாகவும் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் விமர்சனத்திற்கும், வர்ணிப்பதற்கு உள்ளாகி வந்தது. சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் பிங்க் கலர் புடவையில் தனது அழகை வெளிப்படுத்தி ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here