சீரியல் நோக்கி நகரும் பிரபல நடிகை… படத்தில சான்ஸ் இல்லையோ!!!

0
இடுப்பு மடிப்புல இளசுகளை மடுச்சு போட்ட கனிகா.., அழகில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!
இடுப்பு மடிப்புல இளசுகளை மடுச்சு போட்ட கனிகா.., அழகில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

வெள்ளித்திரையில் களம் கண்ட பல நாயகிகள் தங்களுக்கு அங்கு சற்று மார்க்கெட் குறையும் போது மெதுவாக சின்னத்திரை பக்கம் தலை காட்டுவார்கள். அந்த பாணியை நம்ம தல பட நாயகியும் மேற்கொள்ள உள்ளார். அதாவது , நடிகை கனிகா டிவி சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்பொழுதெல்லாம் வெள்ளித்திரையில் உள்ளவர்கள் சின்னத்திரைக்கு வருவதும் சின்னத்திரையில் உள்ளவர்கள் வெள்ளித்திரைக்கு செல்வதும் சாதாரணமாகி விட்டது. முன்பெல்லாம் தங்களின் மார்க்கெட் சரிந்தாலும் கூட சின்னத்திரை வர நடிகர் நடிகைகள் தயங்குவர். அதையும் மீறி வருபவர்கள் சின்னத்திரையிலும் ஒரு நல்ல இடத்தை பிடித்தும் வருகின்றனர். மேலும் வெள்ளித்திரையில் அவ்வப்போது சில முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். அந்த வகையில் உள்ளவர்கள் தான் தேவயானி, ரம்யா கிருஷ்ணன்,அம்பிகா,பூர்ணிமா ஜெயராம் ஆகியோர்.

தற்போது அவர்களின் வரிசையில் தல படத்தின் நாயகி கனிகா அவர்களும் இணைய உள்ளார். அதாவது, நடிகை கனிகா பைவ் ஸ்டார் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பின்னணி பாடல்கள், டப்பிங் ,தொகுப்பாளினி என பல்வேறு திறமைகள் வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் தேவயானி நடித்த கோலங்கள் நாடகத்தை இயக்கிய திருசெல்வம்  இயக்க இருக்கும் புது சீரியல் ஒன்றில் இவர் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. எனினும் கூடிய விரைவில் கனிகா அவர்களை சின்னத்திரை மூலம் மீண்டும் காணலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here