இன்ஸ்டாகிராமில் உள்ள குறையை கண்டுபிடித்த இந்தியருக்கு ரூ.22 லட்சம் பரிசு…

0

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் உள்ள குறையை கண்டுபித்து சொன்ன இந்திய இளைஞர் மயூர் ஃபார்ட்டே என்பருக்கு பேஸ்புக் நிறுவனம் ரூ.22 லட்சம் பரித்தொகையை அறிவித்துள்ளது.

மிகவும் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், பயனர் ஒருவர் இன்னொரு பிரைவேட் அக்கவுண்ட் வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் பயனரை பின்தொடராமலேயே அவர்களின் விடீயோக்கள், போஸ்ட், ரீல்ஸ் போன்றவற்றை பார்க்கலாம் என்ற குறையை சோலாப்பூரை சேர்ந்த மயூர் ஃபார்ட்டே என்ற 21 வயது இளைஞர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இன்ஸ்டாகிராம் தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவ்வாறு இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள குறைபாட்டை தெரியப்படுத்தியதால் அந்த இளைஞருக்கு பேஸ்புக் நிறுவனம் 30,000 டாலர்களை பரிசாக வழங்கியுள்ளது. அதாவது இந்தியா ரூபாயின் மதிப்பில் சுமார் 22 லட்சம். இதே இளைஞர் தான் இதற்கு முன்பு பேஸ்புக்கில் உள்ள ஒரு குறையையும் தெரியப்படுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here