வருகிறது கொரோனா மூன்றாம் அலை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கிய அரசு!!!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றில் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்குகளால் மே மாதத்தில் பெரும் உச்சம் தொட்ட இரண்டாம் அலை, தற்போது ஜூன் மாதத்தில் குறையத் தொடங்கிவிட்டது.  இதே போன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடந்தால் மூன்றாம் அலை வராது, இல்லையெனில் இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இரண்டாம் அலையின் தாக்கம் குறையத் தொடங்கிவிட்டது என பெரும் மூச்சு விடுவதற்குள் மூன்றாம் அலை குறித்து மருத்துவத் துறையினர் எச்சரிக்கை விடத் தொடங்கிவிட்டனர். மேலும், இந்த மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் குறிவைக்கும் எனவும், குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளனர்.  மூன்றாவது அலை குறித்த அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. அரசும் அதற்குத் தயாராகி வருகிறது.

தற்போது சென்னை மாநகராட்சி, மூன்றாம் அலையை சமாளிக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பார்ட்டி ஹால்களில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்து சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் உரிமையாளர்கள் முன்கூட்டியே பதிவு செய்வது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here