ஆக்சிஜன் பற்றாக்குறை எதிரொலி – நாடு முழுவதும் 6,260 டன் ஆக்சிஜன் ரயில்கள் வாயிலாக விநியோகம்!

0

இந்திய ரயில்வே இதுவரை 100 ரயில்களில் 396 டேங்கா்களில் சுமாா் 6,260 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகித்துள்ளது.

100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களை பாதித்து வருகிறது. இதனால் நேற்று ஒரே நாளில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வாயிலாக 800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகிக்கப்பட்டது. இதுவரை 100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ளன.

இதுவரை மகாராஷ்டிராவிற்கு 407 மெட்ரிக் டன்னும், உத்தரப் பிரதேசத்திற்கு 1680 மெட்ரிக் டன்னும், மத்தியப் பிரதேசத்திற்கு 360 மெட்ரிக் டன்னும், ஹரியானாவிற்கு 939 மெட்ரிக் டன்னும், தெலங்கானாவிற்கு 123 மெட்ரிக் டன்னும், ராஜஸ்தானிற்கு 40 மெட்ரிக் டன்னும், கர்நாடகாவிற்கு 120 மெட்ரிக் டன்னும், தில்லிக்கு 2404 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட திரவ மருத்துவ பிராணவாயுவும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மேலும் தெலங்கானாவுக்கு 123 மெ.டன்னும், ராஜஸ்தானுக்கு 40 மெ.டன்னும், கா்நாடகாவுக்கு 120 மெட்.டன்னும், தில்லிக்கு 2,404 மெட்.டன்னுக்கும் மேற்பட்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரிலிருந்து உத்தராகண்டிற்கு முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், 120 மெட்ரிக் டன் பிராணவாயுவை நேற்று இரவு கொண்டு சேர்த்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here