13 நகரங்களில் தொடங்கப்படும் 5G நெட்வொர்க் சேவை – வெளியான புதிய அப்டேட்!!

0

உலக நாடுகளில் லேட்டஸ் அப்டேட் ஆன 4ஜி நெட்வொர்க் சேவைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கின்றது. இதன் மேலும் ஏராளமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் 5ஜி அலைக்கற்றையின் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது.

அதில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை ஏலத்தில் பெற விரும்பினர். மேலும் 5ஜி அலைக்கற்றையை முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் 1,50,173 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் பெற்றுள்ளது. மேலும் இதனை மோடி திறந்து வைப்பதாக கூறப்படுகிறது.

தொலைத் தொடர்பு இணை மந்திரி தேவசின் சவுகான் கூறியிருப்பதாவது, நாட்டில் இன்னும் 1 மாத காலத்திற்குள் 5ஜி சேவைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் முதற்கட்டமாக 5ஜி சேவைகள் சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர் உள்ளிட்ட 13 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது என்று தொலைத் தொடர்பு இணை மந்திரி தேவசின் சவுகான் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here