ஆதார் கார்டில் விவரங்களை மாற்ற வேண்டுமா?? இனி கியூவில் நிற்க வேண்டிய அவசியமில்லை!!

0

இந்தியாவில் மக்களின் முக்கிய பங்காக ஆதார் கார்டு விளங்குகிறது. இதனை தொடர்ந்து மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் எல்லா சான்றிதழ் வாங்குவதற்கு ஆதார் கார்டு இன்றியமையாததாக இருக்கிறது. இந்நிலையில் எல்லா விதமாக பயன்படும் இந்த ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி போன்றவை நிறையப் பேருக்கு தவறுதலாக இருக்கும். அதனை மாற்றுவதற்கு ஆதார் மையத்திற்குச் சென்று அலைய வேண்டியது இருக்கும்.

மேலும் ஆதார் மையத்தில் ஒரு நாளைக்கு குறைந்த நபர்கள் மட்டுமே மாற்றம் செய்வார்கள். இதனால் வரிசையில் நின்று பெரும்பாலான மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இனிமேல் இந்த கவலை வேண்டாம் தற்போது வீட்டில் இருந்து முன் பதிவு செய்து வரிசையில் நிற்பதை தவிர்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பாட்ஷா 2 படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது அஜித்தா? இணையத்தில் கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்!!

அதாவது, https://uidai.gov.in என்ற வெப்சைட் மூலம் சென்று my aadhaar’ என்பதை கிளிக் செய்து ‘Book an appointment’ என்ற வசதியை தேர்ந்தெடுத்து, அடுத்தபடியாக தங்கள் நகரம் மற்றும் இருப்பிடத்தை தேர்வு செய்து proceed கிளிக் செய்ய வேண்டும் மற்றும் தங்கள் மொபைல் எண்ணைப் பதிவிட்டு ‘New aadhaar’ அல்லது ‘aadhaar update’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு ’Generate OTP’ கிளிக் செய்து OTP நம்பரை பதிவிட்டு ‘verify’ என்பதை கிளிக் செய்யவும். மேலும் ஆவணங்களுடன் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முகவரி விவரங்களை உள்ளிட்டு மற்றும் எந்த நாள் – எந்த நேரம் என்பதை தேர்ந்தெடுத்து ’next’ என்பதை கிளிக் செய்தால் அப்பாயிண்ட்மெண்ட் புக் ஆகிவிடும். இந்த தேதியில் சென்று ஆதாரில் அப்டேட் செய்யலாம். இதன் மூலம் மக்களின் அலைச்சலை குறைப்பதற்கு ஒரு நல்ல திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here